துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்
22 பேர் பலி 90-க்கும் அதிகமானோர் காயம்

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியில் உள்ளது காஜியண்டெப் நகரம். இந்த நகரத்தில் நேற்று இரவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காஜியண்டெப் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

.எஸ் அமைப்பிற்கான அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி தெரிவித்திருக்கிறார்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top