Thursday, September 29, 2016

கண்டி மாவட்ட மக்களுக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னெத்துள்ள இரண்டு நாள் நடமாடும் சேவை

கண்டி மாவட்ட மக்களுக்காக

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

முன்னெத்துள்ள இரண்டு நாள் நடமாடும் சேவை

கண்டி மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் சுத்தமான குடிநீர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காணும் விதத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னெத்துள்ள இரண்டு நாள் நடமாடும் சேவையை இன்று (29) முற்பகல் கண்டி கட்டுகஸ்தோட்டை பாரிய நீர் சுத்திகரிப்பு வளாகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.

ஆயிரக்கணக்கான பொது மக்கள் பிரசன்னமாயிருந்த இந்த நடமாடும் சேவையில் அமைச்சர் எம்.எச்.. ஹலீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், சபையின் தலைவர் பொறியியலாளர் கே.. அன்சார், பிரதித்தலைவர் சபீக் ரஜாப்தீன்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் டீ சில்வா உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment