Thursday, February 2, 2017

சம்மாந்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயம், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆகியவத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


சம்மாந்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயம்,

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆகியவத்திற்கு

விஜயம் செய்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

கடந்த 1 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதேசத்தின் பல பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு பாடசாலை பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தார்.
சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு ஜனாதிபதி அவர்கள் முதலில் விஜயம் செய்தார்.
எதிர்பாராத வேளையில் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் மாணவிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள் பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின்னர் கல்முனை ஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் மாணவிகளின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
ஜனாதிபதியின் விஜயத்தின் போது  திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே, அமைச்சர் ராஜித சேனாரத்ன, அசாத் சாலி ஆகியோர்களும் இணைந்து கொண்டார்கள்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.










No comments:

Post a Comment