Friday, February 3, 2017

சர்வ மத அறநெறிப் பாடசாலைகளின் நிகழ்வு


சர்வ மத அறநெறிப் பாடசாலைகளின் நிகழ்வு

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் பற்றிய எண்ணக்கருவினை சர்வ மத தலைவர்கள் மற்றும் சர்வ மத அறநெறி ஆசிரியர்களின் ஊடாக சமயக் கல்வியுடன் இணைப்பதனை நோக்காகக் கொண்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சர்வ மத அறநெறிப் பாடசாலைகளின் நிகழ்வு இன்று முற்பகல் (03) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை நினைவுகூரும் முகமாக நினைவு முத்திரையையும், முதல்நாள் அஞ்சல் உறையையும் தபால் அமைச்சர் எச்.எம்.அப்துல் ஹலீம் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

சர்வ மத தலைவர்களும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய அலுவலகத்தின் தலைவி திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி உள்ளிட்ட குழுவினர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.




No comments:

Post a Comment