Wednesday, March 1, 2017

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலியின் பொதுக் கூட்டம் நிந்தவூரில்


முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம்

ஹசனலியின் பொதுக் கூட்டம் நிந்தவூரில்



முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் கட்சியின் மூத்த உறுப்பினருமான  எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், எதிர்வரும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக ஹசனலி பதவி வகித்த போது, அந்தப் பதவியின் அதிகாரங்களை சூழ்ச்சிகரமாகப் பறித்தெடுத்தமை, முழு அதிகரம் கொண்ட செயலாளர் பதவி மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றினை வழங்குவதாக கூறி, ஹசனலியை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஏமாற்றியியமை தொடர்பில், மக்களுக்கு ஹசனலி இக்கூட்டத்தில்  தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எம்.ரி.ஹசன் அலி நேற்று மாலை  ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு  சென்று  அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்தில்( துஆ )பிரார்த்தனையில்  ஈடுபட்டிருந்தார் இது குறித்த செய்திகளும் படங்களும் வெளியாகியிருந்தது .
இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்துக்கான முன்னோடியாக கலந்துரையாடலொன்று, இன்று புதக்கிழமை நிந்தவூரில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment