Wednesday, March 1, 2017

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் பூரண ஆதரவு

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின்

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின்

கிழக்கு மாகாண சங்கம் பூரண ஆதரவு

(அஸ்லம்)

        / lAk` a[&`pn pÝp`ln @Sv` Î][`ÝN@G sAgmy
,yq;if fy;tp epUthf Nrit cj;jpNahfj;jh; rq;fk;
SRI LANKA EDUCATIONAL ADMINISTRATIVE SERVICE OFFICERS’ UNION
             fpof;F khfhzk;      n#@gnµr p]`w     - Eastern Province

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கும், அவர்கள் அரச வேலை ஒன்றைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகளுக்கும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் பூரண ஆதரவை வழங்குவதாக அச்சங்க செயலாளர் .எல்.முஹம்மட் முக்தார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்படி சங்கச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு சுமார் 5000 பேர் தோற்றிய போதும் வெறும் 230 பேர் மாத்திரம் சித்தியடைந்தமையானது பரீட்சையில் நம்பகமற்ற தன்மையை பட்டதாரிகள் மத்தியில் ஏற்படுத்தியமையானது நியாயமானதாகும்.
இப்பரீட்சை நடாத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதனை நாம் சுட்டிக்காட்டியதையடுத்து மீள் பரீட்சை நடாத்தப்பட்டது. இதற்காக அரசுக்கு 52 இலட்சம் மேலதிக செலவு ஏற்பட்டது. இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டமையாலேயே மிகக்கடுமையான வினாத்தாள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் நியமனத்திற்காக போட்டிப்பரீட்சை நடாத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். நேர்முகப் பரீட்சை மூலம் தகுதியுள்ளோரை தெரிவு செய்து பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு முன்னர் மூன்று மாத காலம் சேவை முன்பயிற்சி வழங்கி பின்னர் வார நாட்களில் ஆசிரியர் பயிற்சிகளை வழங்க வேண்டும். இதுவே உண்மையான கற்றல், கற்பித்தலை பாடசாலைகளில் வினைத்திறன் உள்ளதாக வைத்திருக்கும். இதனை விடுத்து பரீட்சை நடாத்துவது பட்டதாரிகளை அவமதிக்கும் செயற்பாடாகும்.
இவ்வாறான போட்டிப்பரீட்சைகளை நடாத்தி ஆசிரியர்களை தெரிவு செய்வதன் மூலம் கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் செல்லும் என்பதை கிழக்கு மாகாண நிருவாகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராட வைக்காமல் பரீட்சைக்குத் தோற்றிய சகலருக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்கி அவர்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

No comments:

Post a Comment