Sunday, April 2, 2017

தேசிய யொவுன் புரய 2017' நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


'தேசிய யொவுன் புரய 2017' நிகழ்வில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

திருகோணமலை மெக்ஹெய்சர் விளையாட்டரங்கில்நடைபெறும் 'தேசிய யொவுன் புரய 2017' நிகழ்வின்நேற்றைய நாளுக்கான நிறைவு வைபவத்தின் பிரதமஅதிதியாக நேற்று 1 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
யொவுன் புரவை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள்இளைஞர் யுவதிகளுடன் நட்புறவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
யொவுன் புரயின் படைப்பாற்றல்மிக்க மாவட்டமாக தெரிவு செய்யப்பட்ட மொனராகலை மாவட்டத்திற்கும் மிகச் சிறந்த மாவட்டமாக தெரிவு செய்யப்பட்ட கம்பஹா மாவட்டத்திற்கும் ஜனாதிபதி அவர்கள் பரிசில்களை வழங்கினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சஜித்பிரேமதாச, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் நிரோஷன்பெரேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, முதலமைச்சர் நசீர் அஹமட், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின்தலைவர் எரந்த வெலிஅங்கே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.











No comments:

Post a Comment