Monday, May 29, 2017

லொறியுடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் நிந்தவூரில் சம்பவம்


 லொறியுடன் நேருக்கு நேர்

மோதிமோட்டார் சைக்கிள்

நிந்தவூரில் சம்பவம்

நிந்தவூர் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்   காயத்துக்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
நிந்தவூர் பிரதான வீதி சம்பத் வங்கிக்கு முன்னால் இன்று காலை 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
கல்முனையிலிருந்து அக்கரைபற்றை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டியயைச் சேர்த லொறிலேயே இவ்வாறு மோட்டார் சைக்கிளோடு மோதுண்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மயக்கமுற்று கிடந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது..
மோட்டார் சைக்கிளில் வந்து லொறியுடன் மோதி   மயக்கமுற்று கிடந்த நபர் நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர் "உமர் கத்தா" என இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








No comments:

Post a Comment