Tuesday, May 30, 2017

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் தற்போது பதில் அதிபராகக் கடமையாற்றுபவரை தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்குமாறு சாய்ந்தமருது ஷூறா சபை கோரிக்கை



கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் தற்போது பதில் அதிபராகக்

கடமையாற்றுபவரை தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்குமாறு

சாய்ந்தமருது ஷூறா சபை கோரிக்கை

நிரந்தர அதிபர் பதவிக்கு சாய்ந்தமருது அல்லது கல்முனைக்குடியில்

 ஒருவரை இனம் காணுமாறும் வேண்டுகோள்



கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் தற்போது பதில் அதிபராகக் கடமையாற்றுபவரை தொடர்ந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடமையாற்ற அனுமதிக்குமாறு சாய்ந்தமருது ஷூறா சபை வலயக் கல்விப்பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இக்கல்லூரியில்  நிரந்தர அதிபர் பதவிக்கு சாய்ந்தமருது அல்லது கல்முனைக்குடியில் ஒருவரை இனம் காணுமாறும் வேண்டுகோள் விடுத்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

2017.05.25 இல் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீமானங்கள் வருமாறு,

1 கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் தற்போது பதில் அதிபராகக் கடமையாற்றுபவரை தொடர்ந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (02 வருடங்கள்) கடமையாற்ற அனுமதிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளரைக் கோருதல். அதேவேளை நிரந்தர அதிபர் பதவிக்கு சாய்ந்தமருது அல்லது கல்முனைக்குடியில் ஒருவரை இனம் காணல்.
2. 1 சாய்ந்தமருது வைத்தியசாலையை ஏற்கனவே கிழக்கு மாகாண சபை விடுத்த தீர்மானத்திற்கிணங்க தள வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு சுகாதார அமைச்சரைக் கோருதல்.
2. 2  சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் உழைக்க்க் கூடிய இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வைத்திய அதிகாரியை இனம் காணல்.
2. 3 சாய்ந்தமருதுக்கு நடமாடும் அம்புலன்ஸ் வண்டி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
3.  குத்பாக்களில் சிறந்த  வாழ்வொழுங்கு, நற்பண்புகள், இன நல்லொறவு போன்ற  விடயதானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியும் ஒலிபெருக்கி பாவனையை அதான் மற்றும் முக்கிய அறிவித்தல்களுக்கு  மட்டுப்படுத்தும்படியும் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தைக் வேண்டுதல்.
4.  சாய்ந்தமருது பிரதேசத்தில் கிராம சேவையாளர்  பிரிவு ரீதியாக அல்லது 3 வலயங்கள் ரீதியாக அவசர தகவல்களையும்  உதவிகளையும் பெற்றுக் கொள்ள அவசர தகவக் நிலையம்  ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பாக  பிரதேச செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தல். இந்நிலையத்திற்குப் பொறுப்பாக ஒருவர் நியமிப்பதோடு ஒரு மேற்பார்வைக் குழுவும் செயற்படவேண்டும். இந்நிலைஅத்தின் மூலம் அனர்த்த முகாமை, ஜனாஸா நலன்புரி, உட்கட்டமைப்பு சீராக்கல் போன்ற  விடயங்கள் தொடர்பாக  நடவடிக்கை எடுக்கப்படலாம்.
5. கல்முனை மாநகர சபை  சோலை வரியை அறவீடு செய்வதில் உள்ள சிக்கல்கள், சோலை வரி வீத்த்திலுள்ள ஏற்றத் தாழ்வு மற்றும்  உரிய காலத்தில் அறிவித்தல்கள் அனுப்ப்படாமை தொடர்பாக  ஆணையாளரைச் சந்தித்து நடவடிக்கை எடுத்தல்.
ஜனாப் எம்.ஐ.எம்.சதாத்
கெளரவ செயலாளர். 

No comments:

Post a Comment