Thursday, June 29, 2017

பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவு செய்யும் திகதி நீடிப்பு




பல்கலைக்கழகங்களுக்காக அனுமதிக்கான பதிவு செய்யும் திகதியை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி. சில்வா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக் கடிதங்கள் இன்னும் கிடைக்கவில்லை என பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வந்ததை அடுத்தே இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்காக அனுமதிக்கான காலம் நாளையுடன் (30) முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment