Friday, June 30, 2017

அமைச்சர் ரிஷாட் வேண்டுகோளுக்கமைய யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இன்று இடம்பெற்ற விஷேட உயர்மட்ட கூட்டம்


யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம் இன்று 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் கச்சேரியில் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியதீன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இடம்பெறும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மாகாண சபை உறுப்பினர்களான ஐயூப் அஸ்மின், இமானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment