Tuesday, October 31, 2017

நுவரெலியாவில் 4 புதிய பிரதேச ​சபைகளுக்கு அங்கிகாரம்



நுவரெலியாவில் 4 புதிய பிரதேசசபைகளுக்கு அங்கிகாரம்



நுவரெலியா மாவட்டத்தில் 4 புதிய பிரதேச சபைகளை நிறுவுவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நோர்வூட், மஸ்கெலியா, ஆகர்ப்பத்தன மற்றும் கொட்டகல ஆகிய புதிய பிரதேச சபைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகரித்துள்ளது என்று அமைச்சர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கிகாரம், “தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு பயணத்தில் ஒரு மைல்கல்லாகும்என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment