Tuesday, October 31, 2017

சந்திவெளி சந்தையிலும் பதற்றம்; ஒரு சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் வெளியேறினர்


சந்திவெளி சந்தையிலும் பதற்றம்;

ஒரு சமூகத்தைச் சேர்ந்த

வர்த்தகர்கள் வெளியேறினர்

மட்டக்களப்பு, சந்திவெளி சந்தையில் சிறுபான்மைச் சமூகங்களிடையே இன்று 31 ஆம் திகதி ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
இதனால் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.


இதேவேளை, மட்டக்களப்பு, கிரான் வாராந்தச் சந்தையில் வியாபாராம் செய்வது தொடர்பாக, சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடையில், கடந்த  29ஆம் திகதி  வௌ்ளிக்கிழமை ஏற்பட்ட முறுகல் நிலையால், அங்கிருந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.  



No comments:

Post a Comment