Wednesday, November 29, 2017

நாட்டு மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு


நாட்டு மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் 

கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு



நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி , மாத்தறை , ஹம்பாந்தோட்டை , களுத்துறை மற்றும் பதுளை மாவட்டங்களில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

மேலும், மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 12 மணித்தியாளங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு வேளைகளில் இருந்த நிலைமை, நாளை மாலை வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.


அவசர நிலைமைகளின் போது தாம் வாழும் பகுதியில் உள்ள பிரதேச செயலகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 117க்கு தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment