Wednesday, November 29, 2017

புனானை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.


புனானை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன  விபத்தில்

மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 11.45 மணியளவில் இடம்பெற்ற வாகன  விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
வாழைச்சேனை வனஇலாகா காரியாலத்தில் இருந்து தனது கடமைநிமித்தம் புனானை பகுதிவன உத்தியோகத்தர் புனானை பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தை நோக்கி வந்த காரும் மோட்டார் சைக்கிளும் புனானை 120வது மைல்கல்லுக்கு அருகாமையில் நேருக்கு நேர் மோதியதிலயே இவ் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நபர் ஸ்தலத்திலயே உயிர் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனானை பிரிவிற்கு பொறுப்பான பகுதிவன உத்தியோகத்தர் அதிகாரியான மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  .சி..றவூப் (வயது 42) என்பவரே மரணமடைந்துள்ளதாக  அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments:

Post a Comment