Saturday, December 30, 2017

மன்னார் புதிய ஆயருக்கு அமைச்சர் ரிஷாட் வாழ்த்து தெரிவிப்பு!


மன்னார் புதிய ஆயருக்கு

அமைச்சர் ரிஷாட் வாழ்த்து தெரிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, மரியாதைக்குரிய பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்கள் கடமையேற்கும் நிகழ்வு, மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இன்று 30 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment