Thursday, December 28, 2017

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – ஹக்கீம், திகாம்பரம் கோரிக்கை


விசேட அதிரடிப்படை 

பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

ஹக்கீம், திகாம்பரம் கோரிக்கை


விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதி முக்கிய பிரபுகளுக்கு வழங்கப்படும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை மனோ கணேசனுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
கொழும்பு மாநகரசபை தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மனோ கணேசனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களைப் போன்றே தமக்கும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தெரிவித்து ஹக்கீம் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment