Thursday, December 28, 2017

“ரோட்டுப் போட இயலாதவர்கள் வோட்டுக் கேட்டு வரவேண்டாம்” மருதமுனை மக்பூலியா வீதியில் பொதுமக்கள் போராட்டம்


“ரோட்டுப் போட இயலாதவர்கள்

வோட்டுக் கேட்டு வரவேண்டாம்

மருதமுனை மக்பூலியா  வீதியில்

 பொதுமக்கள் போராட்டம்



“ரோட்டுப் போட இயலாதவர்கள் வோட்டுக் கேட்டு வரவேண்டாம்  என்று கோசம் எழுப்பி போராட்டம் ஒன்றை மருதமுனை பொதுமக்கள் நடத்தியுள்ளனர்.
மருதமுனை, மக்பூலியா வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை அபிவிருத்தி செய்து தருமாறு, பொதுமக்கள் பல வருட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தற்போது கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் மருதமுனை மண்ணில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.
இதனையடுத்து, மருதமுனை மக்பூலியா  வீதியில் நேற்று (27) ஒன்று திரண்ட பொதுமக்கள், “ரோட்டுப் போட இயலாதவர்கள் வோட்டுக் கேட்டு வரவேண்டாம்”  என்று கோசம் ழுப்பி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வீதியை யார் விரைவாக அபிவிருத்தி செய்து தருகிறார்களோ, அவா்களுக்கு கட்சி பேதம் பாராமல் வாக்களிப்போம். அபிவிருத்தி செய்து தருவதற்கு  யாரும்  முன்வராவிட்டால் தேர்தலை பகிஸ்கரித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவோம்எனவும் பொதுமக்கள் தமது ஆதங்கங்களை  வெளிப்படுத்தியுள்ளனர்.


No comments:

Post a Comment