Wednesday, January 31, 2018

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம் அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லை


சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள

அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம்

அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லை

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலமே இது!
இப்பாலத்தின் ஊடாகத்தான் பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம், /மு றியாழுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா மற்றும் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலை என்பன போன்ற காரியாலயங்களுக்குச் செல்ல வேண்டும்.
மிக அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.
அமைச்சரவை அனுமதியுடன் தோணா அபிவிருத்தி எனக்கூறி 16 கோடிக்கும் அதிக தொகை நிதியைப் பெற்று தோணாவில் உள்ள சல்வீனியாக்களை பாரிய இயந்திரங்கள் கொண்டு அள்ளுவதற்கும் முண்டுக்கற்களை அடுக்குவதற்கும் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,அபாயகரமான இந்தப் பாலத்தைப் பற்றி அரசியல்வாதிகள் எவரும் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்,
ஊடகவியலாளர்.  


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் எழுதிய இராஜினாமாக் கடிதம்


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் எழுதிய இராஜினாமாக் கடிதம்

டிசம்பர் 2014
கட்சி ஆதரவாளர்களினாலும் மக்களினாலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகவே அரசாங்கத்தை விட்டு விலகின்றேன்.
வரலாற்றில் வந்த மிகப் பெரும் அரசியல்வாதி நீங்கள், நாட்டை பல்வேறு வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்.
மிக்க நன்றிக்கடனுடனும் நம்பிக்கையுடனும் உங்களைவிட்டுப் பிரிகின்றேன்.

உங்கள் உண்மையுள்ள, ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர்,,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
பிரதிகள் 
லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர்.



தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை


தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு

சம்பளமற்ற விடுமுறை


உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவை வழங்குமாறு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சுற்று நிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். முஹம்மட் தெரிவித்துள்ளார்.

பொதுநிருவாக அமைச்சின் 32/2017 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி இரண்டாம் நிலை மட்டமாக கணிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர், கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் இணைந்த அலுவலர், இலங்கை ஆசிரியர் சேவை, தாதிச் சேவை உள்ளிட்டோர் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அல்லாதவர்கள் என தாபன பணிப்பாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதையடுத்து இவ்வாறானவர்களுக்கு சம்பமற்ற லீவினை வழங்குமாறு விசேட சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய 01.06.2007 ஆம் ஆண்டு 18940 ரூபா அடிப்படைச் சம்பளமாக கொண்ட உத்தியோகத்தர்களுக்கு தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க முடியாது என அறிவிக்கப்பட்டதற்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலுக்கான சம்பளமறற லீவு மறுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சம்பளமற்ற லீவை வழங்குமாறும் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகாமைத்துவ உதவியாளர் அதி உயர்தரம், இலங்கை அதிபர் சேவை, தாதிச் சேவை அதி உயர்தரம், வெளிக்கள அலுவலர்கள் என்போர்க்கு தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் இவ்வாறானவர்களுக்கு சம்பளமற்ற லீவு வழங்கப்படமாட்டாது எனவும் தாபனப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அரசியல் உரிமையுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கான வேட்பாளர் சம்பளமற்ற லீவு மறுக்கப்பட்டமை தொடர்பாக தாபன பணிப்பாளர் நாயகத்திடம் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் முறையிட்டதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

தேர்தல் வன்முறைகள் பொலன்னறுவ மாவட்டம் சாதனை கிளிநொச்சியில் மிகக் குறைவு


தேர்தல் வன்முறைகள்

பொலன்னறுவ மாவட்டம் சாதனை

கிளிநொச்சியில் மிகக் குறைவு


உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில்,

கடந்த சில வாரங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் தேர்தல் தொடர்பான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடிந்த போதிலும், கடந்த வாரம் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் தேர்தல் வன்முறைகள், மற்றும் விதிமீறல்  தொடர்பான 115 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வன்முறைகளில், ஐதேகவின் இரண்டு வேட்பாளர்களும். 3 ஆதரவாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்பாளர்களும், இரண்டு ஆதரவாளர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு வேட்பாளரும்,  3 ஆதரவாளர்களும், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும், சுயேட்சை வேட்பாளர்கள் நால்வரும், தேர்தல் வன்முறைகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


பொலன்னறுவ மாவட்டத்திலேயே அதிகளவு தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மிக்க குறைந்தளவு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு


வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு

அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு றிசாத் பதியுதீனிடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இது போன்று திருகோணமலை அபிவிருத்திப் பணிகளுக்கான பொறுப்பு சரத் பொன்சேகாவிடமும், வடக்கை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சுவாமிநாதனிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நெடுஞ்சாலை வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்படும். கண்டியில் இருந்து திருகோணமலைக்கு  நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று இணங்கியுள்ளது.
திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியினால், திருகோணமலையைச் சுற்றியுள்ள, வவுனியா உள்ளிட்ட பகுதிகளும் அபிவிருத்தியடையும்.
திருகோணமலையில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேலைகளுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொறுப்பாக இருப்பார்.
வன்னி அபிவிருத்தி வேலைகளுக்கு றிசாத் பதியுதீனும், வடக்கு அபிவிருத்தி வேலைகளுக்கு சுவாமிநாதனும் பொறுப்பாக இருப்பார்கள்.

மாங்குளத்தில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில் முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத் தட்டிக்கொடுத்துபேசியவர் இந்த மக்களுக்கு இன்று வரை எதுவுமே செய்யவில்லை ‘முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த

முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில்

முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத்

தட்டிக்கொடுத்துபேசியவர் இந்த மக்களுக்கு

இன்று வரை எதுவுமே செய்யவில்லை

முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

முல்லைத்தீவுக்கு ஒரு தடவை வந்த மு.கா தலைவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில் முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத் தட்டிக்கொடுப்பது போலவ அவரின் கதைகள் அமைந்திருந்தன. இனவாத சக்திகளிடம் எவ்வாறாவது எம்மைக் காட்டிக் கொடுத்து, தாங்கள் அரசியலில் நல்லபெயர் எடுக்க வேண்டுமெனவும், அதன் மூலம் தாங்கள் குளிர்காய்ந்து விட முடியும் எனவும் மு.கா தலைமை சிந்திக்கின்றது. இவ்வாறு என்னை மோசமாக விமர்சித்து, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதாக அன்று கூறியோர் இற்றைவரை எதுவுமே இந்த மக்களுக்கு செய்யவில்ல என. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்
கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில், நாம் எதிர்நோக்கும் கஷ்டங்களையும், சவால்களையும் நீங்கள் அறிவீர்கள். இந்தக் குடியேற்றத்தை எதிர்ப்பவர்கள் எங்களை இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் வெளியுலகுக்குக் காட்டி, எவ்வாறாவது மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
மீண்டும் வாழ்வதற்காக இங்கு வந்த முஸ்லிம்கள், தமது காணிகளை துப்புரவாக்கியபோது, அதனை துப்புரவாக்க விடாமல் டோசருக்கு முன்னே குப்புறப்படுத்து சிலர் அதனைத் தடுத்தனர்.
தமிழ் மக்களுக்கு எங்களைப் பற்றி பிழையான கருத்துக்களைக் கூறி, அவர்களை உசுப்பேற்றி மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமென அவர்கள் முயற்சித்தார்கள். அதன் பின்னர், நாங்கள் காணி இல்லாத இந்த மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து மாணவர்களைக் கொண்டுவந்து எனக்கெதிராகக் கோஷமிட்டனர்.
நான் காடுகளை அழிப்பதாக அவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டனர். ஊடகங்களின் மூலம் என்னைப்பற்றி, இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த நிலையில், இந்த சம்பவங்களின் பின்னர் முல்லைத்தீவுக்கு வந்த மு.கா தலைவர், இங்குள்ள கூட்டங்களிலே என்னையே பிழை கண்டார். இனவாதிகளுடன் இணங்கிப்போக வேண்டுமெனவும், விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கூறி, என்னை மோசமாக விமர்சித்துவிட்டு இந்தப் பிரச்சினைக்கான தீர்வை, தான் பெற்றுத்தருவதாகக் கூறினார். ஆனால், இற்றைவரை அவரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத், தட்டிக்கொடுப்பது போலவ அவரின் கதைகள் அமைந்தன. இனவாத சக்திகளிடம் எவ்வாறாவது எம்மைக் காட்டிக் கொடுத்து, தாங்கள் அரசியலில் நல்லபெயர் எடுக்க வேண்டுமெனவும், அதன் மூலம் தாங்கள் குளிர்காய்ந்து விட முடியும் எனவும் மு.கா தலைமை சிந்திக்கின்றது. இவ்வாறு என்னை மோசமாக விமர்சித்து, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறியோர் இற்றைவரை எதுவுமே செய்யவில்ல.
தேர்தலுக்காக மட்டும் இப்போது வந்து வீர வசனம் பேசுகின்றனர். எமக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கின்றனர். சந்திக்குச்சந்தி வேட்பாளர்களை நிறுத்தி, வாக்குகளைப் பிரித்து எம்மைப் பலவீனப்படுத்துவதன் மூலம், இந்தப் பிரேசத்தில் பட்டுப்போய் கிடக்கும் மரத்தை மீண்டும் துளிர்விட செய்யலாமென அவர்கள் நாப்பசை கொண்டுள்ளனர்.
அவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், பொய்யான வாக்குறுதிகளுக்கும் நீங்கள் ஏமாந்தீர்களேயானால், நஷ்டமடைவது நீங்களே. இது வாக்குச் சேர்க்கும் தேர்தல் அல்ல. உங்கள் வட்டாரத்தில் உள்ள எமது கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். அவர்கள் மூலம் உங்களுக்கும், எமக்குமிடையுமான உறவு வலுப்படுத்தப்படுவதால் நன்மையடையப் போவது நீங்களே.
தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரையில், எனது அரசியல் வளர்ச்சியையும் அபிவிருத்திப் பணிகளையும் தடை செய்வதில், அங்குள்ள சிலர் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர். எனது கைகளை கட்டிப்போட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். ஆனால், நாங்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எழுவோம். இறைவன் எமக்கு அந்த சக்தியைத் தந்துள்ளான். சதிகாரர்கள் என்னதான் செய்தாலும் மக்களுக்கான எனது பணியிலிருந்து நான் ஒதுங்கப் போவதும் இல்லை.
மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய உதவிகளும் தமிழ்க் கூட்டமைப்போ, வடமாகாண சபையோ செய்யாத நிலையிலேயே, அரசின் உதவியுடன் நாங்கள் மீள்குடியேற்றச் செயலணியை அமைத்தோம். ஆனால், ஒருசில அரசியல் புதுமுகங்கள் மீள்குடியேற்றச் செயலணியின் நடவடிக்கைகளை, தமது செயற்பாடுகளாகக் காட்டுகின்ற துரதிஷ்டமான நிலை இருக்கின்றது. யார் என்னதான் சொன்னாலும், மக்களுக்கு இது நன்கு விளங்கும்.

இவ்வாறான அரசியல்வாதிகளையும், மு.கா அரசியல்வாதிகளையும் மக்கள் இனங்காணத் தொடங்கிவிட்டனர். பொய் எது? உண்மை எது? என்பதை அவர்கள் இப்போது நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான பணிகளை யார் நேர்மையாக முன்னெடுக்கின்றார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாதவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவதற்கு சமனாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.




அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஓட்டமாவடியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக

ஓட்டமாவடியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டமாவடியில் இன்று  இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் தயாகமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.