Thursday, February 1, 2018

ரவி கருணாநாயக்க பதவி விலகாவிடின் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை


ரவி கருணாநாயக்க பதவி விலகாவிடின்

அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை


ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விலகாவிடின், அவரைப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதேகவின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறை மோசடி தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. எடுக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கையை ஆராய்ந்த திலக் மாரப்பன தலைமையிலான ஐதேகவின் உயர்மட்டக் குழு, ரவி கருணாநாயக்கவை, கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்குப் பரிந்துரைத்துள்ளது. எனினும், ரவி கருணாநாயக்க இன்னமும் பதவி விலகவில்லை.

இந்த நிலையில், அவர் பதவி விலகாவிடின், ஐதேகவின் மத்திய செயற்குழு அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்என்று  ஐதேகவின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment