Sunday, April 1, 2018

இன்று நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு


இன்று நாட்டின் பல இடங்களில்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு




நாட்டுக்கு மேலாக இடைக்கால பருவப்பெயர்ச்சி நிலைமைகள் உருவாகிக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடற்பரப்புகளின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



No comments:

Post a Comment