Sunday, April 1, 2018

உயர்கல்வி அமைச்சருக்கும் பல்கலைக்கழக பணியாளர்கள் சபை கூட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை


உயர்கல்வி அமைச்சருக்கும்
பல்கலைக்கழக பணியாளர்கள் சபை
கூட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில்
விசேட பேச்சுவார்த்தை


உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம், பல்கலைக்கழக பணியாளர்கள் சபை கூட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக தமது அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக தொழிற்சங்க குழுவின் இணைத் தலைவர் எட்வேர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், தொழிற்சங்க பிரதிநிதிகளின் கூட்டம் இன்று இடம்பெறும். அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது தமது தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment