Thursday, October 4, 2018

அதிவேக வீதியின் பேலியகொடை நுழைவாயில் தற்காலிக மூடல்


அதிவேக வீதியின் பேலியகொடை
நுழைவாயில் தற்காலிக மூடல்



புதிய களனி பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக பேலியகொடை சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை குறித்த நுழைவாயில்  தற்காலிகமாக  மூடப்படும் என  போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனவே குறித்த காலப்பகுதியில் சாரதிகள்  மாற்று வழியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதற்கமைய   பேலியகொடை சுற்றுவட்ட திற்கு அருகில் அதிவேக வீதியில் உள் நுழையும் வாகனங்கள் கொழும்பு நீர்கொழும்பு காணப்படும் நுழைவாயில் வழியாக அதிவேக வீதிக்குள் நுழையலாம்.
அதே போன்று கொழும்பு - கண்டி வீதியில் தோரண சந்தியில் காணப்படும் நுழைவாயில் வழியாக அதிவேக வீதியில் பிரவேசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment