Friday, November 30, 2018

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் குறைப்பு



பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் குறைப்பு



சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் யாவும், இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் குறைக்கப்படும் என, பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் போன்றவற்றின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வகை
தற்போதைய விலை
புதிய விலை
ஒக்டேன் 92 ரக பெற்றோல்
ரூ. 140
ரூ. 135
ஒக்டேன் 95 ரக பெற்றோல்
ரூ. 164
ரூ. 159
ஒட்டோ டீசல்
ரூ. 111
ரூ. 106
சுப்பர் டீசல்
ரூ. 141
ரூ. 136

No comments:

Post a Comment