Wednesday, December 26, 2018

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று கடமையேற்பு



இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

இன்று கடமையேற்பு







முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று 2018.12.27 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு யூனியன் பிலேஸில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி என பலரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment