Thursday, March 28, 2019

சிறைச்சாலை திணைக்களத்திற்கு 1275 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர் நாளை வர்த்தமானி


சிறைச்சாலை திணைக்களத்திற்கு
1275 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்
நாளை வர்த்தமானி



சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

 இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதற்கமைவாக 1068 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 110 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2ஆம் நிலை ஆண் ஜெயிலர் பதவிக்கும் பெண் ஜெயிலர் பதவிக்காக 10 பேரும் புனர்வாழ்வு ஆண் அதிகாரிகளாக 15 பேரும் பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக மூவரும் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

No comments:

Post a Comment