Tuesday, April 30, 2019

குண்டுதாரி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிப்பு


குண்டுதாரி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள்
நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிப்பு



பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவியும் மகளும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் பொலிஸாரின் விசேட முற்றுகையின் போது கைது செய்யப்பட்டனர்.

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முஹம்மத் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு குண்டுத்தாக்குதல்களுடன் சாதியாவிற்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் அம்பாறை தேசிய வைத்தியசாலையில் பாத்திமா சய்தா மற்றும் அவரது மகள் கிசிச்சை பெற்று வருகின்றனர்.

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராம வீட்டில் குண்டுதாரிகள் தற்கொலை தாக்குதல் நடத்திய போது 15 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதும், பாத்திமா சய்தா மற்றும் அவரது மகள் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த இருவரும் எரிகாயங்களுக்கு உள்ளான போதும் உயிருக்கு ஆபத்து இல்லை என அம்பாறை வைத்தியசாலையின்பொதுமுகாமையாளர் உபுல்விஜயநாயக்க தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment