Tuesday, April 30, 2019

“நாங்கள் உங்களுக்காக போராடுகின்றோம் நீங்கள் காட்டி கொடுக்கின்றீர்களா? இந்தக் காசைச் சப்புங்கடா” கூச்சலிட்டு தப்பிக்க பெருந்தொகை பணத்தை மக்கள் மீது வீசிய பயங்கரவாதிகள்!


நாங்கள் உங்களுக்காக போராடுகின்றோம்
நீங்கள் காட்டி கொடுக்கின்றீர்களா?
 இந்தக் காசைச் சப்புங்கடா
கூச்சலிட்டு தப்பிக்க பெருந்தொகை பணத்தை
மக்கள் மீது வீசிய பயங்கரவாதிகள்!



படையினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெருந்தொகை பணத்தை பொதுமக்கள் மீது சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீசியுள்ளனர்.

கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு முற்றுகையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பயங்கரவாதிகளை ஒழிக்கும் சிறப்பு நடவடிக்கை சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதிரடி படையினர் மற்றும் குண்டுத்தாரிகளுக்கு இடையில் பாரிய துப்பாக்கி பிரயோகம் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.

எனினும் சிறப்பு அதிரடி படையினரின் முற்றுகைக்கு முன்னர் 5000 ரூபாய் நாணயத்தாள்களை அந்த பகுதி மக்களை நோக்கி குண்டுத்தாரிகள் வீசியுள்ளனர்.

நிந்தவூர் பிரதேசத்தில் இருந்த இந்த கும்பல், அந்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொண்டவுடன் அங்கிருந்து தப்பி சாய்ந்தமருது பகுதிக்கு வந்துள்ளனர்.

இதன்போது 10 - 15 பேர் அவ்விடத்திற்கு வந்துள்ளதாக சந்தேகித்த பிரதேச மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி மற்றும் கிராம சேவகரிடம் அறிவித்துள்ளனர்.

உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் கிராம சேவர் மீது குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

எனினும் பொலிஸ் அதிகாரி காயமின்றி தப்பியுள்ளார். பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் போது குறித்த வீட்டில் இருந்த தீவிரவாதிகள் 5000 ரூபாய் நாணயத்தாள்களை அந்த பகுதி வீடுகள் மீது வீசியுள்ளனர். நாங்கள் உங்களுக்காக போராடுகின்றோம் நீங்கள் காட்டி கொடுக்கின்றீர்களா? இந்தக் காசைச் சப்புங்கடாஎன கூச்சலிட்டுள்ளனர்.

ஆனாலும் குறுகிய நேரத்திற்குள் பயங்கரவாதிகள் ஒழிந்திருந்த வீட்டினை அதிரடி படையினர் சுற்றிவளைத்து அழித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment