Tuesday, April 30, 2019

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம் –ஜனாதிபதி உத்தரவு


சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்
ஜனாதிபதி உத்தரவு


சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து, போலி செய்திகள் பரப்பப்பட்டதால் சமூக ஊடகங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன.


No comments:

Post a Comment