Thursday, May 2, 2019

சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த 16 பேரின் இறுதிக் கிரியைகள் பொலிஸாரின் தலைமையில்,


சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத்

தாக்குதல்களில்  உயிரிழந்த
16 பேரின் இறுதிக் கிரியைகள்
பொலிஸாரின் தலைமையில்,

பொலிஸாரின் தலைமையில், சாய்ந்த மருதில் உயிரிழந்த பதினாறு பேரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி குடியேற்ற  பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு பதினாறு பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் பொலிஸாரின் தலைமையில் நல்லடக்கம் செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த 10 வயது வந்தவர்களின் உடல்கள் மத கிரியைகள் எதுவுமின்றி அடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுவர்கள் ஆறு பேரின் உடல்கள் மத கிரியைகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தைச் சேர்ந்த மதகுருமார் மற்றும் அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.














No comments:

Post a Comment