Friday, May 31, 2019

ஜூன் 9 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி


ஜூன் 9 ஆம் திகதி இலங்கை வருகிறார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 9ஆம் திகதி இலங்கைக்கு குறுகிய  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இதனை உறுதிப்படுத்தினார்.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவுக்கும் இலங்கைக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவுக்கான பயணத்தின் ஒரு கட்டமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் வரவுள்ளார். அவர் ஜூன் 9ஆம் திகதி இலங்கை வருவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று புதுடெல்லியில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment