Monday, July 29, 2019

ரவூப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபா பணத்தை காணவில்லையாம்! மனைவி ஷானாஸ் ஹக்கீம் பொலிஸில் முறைப்பாடு


ரவூப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபா
பணத்தை காணவில்லையாம்!
மனைவி ஷானாஸ் ஹக்கீம்
 பொலிஸில் முறைப்பாடு



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள தமது வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக நேற்றிரவு (28) ரவூப் ஹக்கிமின் மனைவி ஷானாஸ் ஹக்கீம் இந்த முறைப்பாட்டை பதிவு  செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த  டி சொய்சாவின் ஆலோசனைக்கு அமைய கறுவாத்தோட்டம் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரவூப் ஹக்கீமின் வீட்டு பணியாளர்கள்  தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் , காணாமல்  போனதாக கூறப்படும் பணம் தொகையை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment