Monday, July 29, 2019

இராணுவத்தினரின் ஜீப் வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ விபத்து!



இராணுவத்தினரின் ஜீப் வண்டியும்
மோட்டார் சைக்கிள் ஒன்றும்
 தீ விபத்து!

மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் இராணுவத்தின் ஜீப் வண்டி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தின் பின்பகுதியின் ஆற்று பக்கமாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன் அருகில் இராணுவ புனர்வாழ்வு பிரிவின் ஜீப்வண்டி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நண்பகல் 1 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்த நிலையில் பொதுமக்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக தீயில் எரிந்துள்ளதுடன் இராணுவத்தின் ஜீப்வண்டி சிறியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
  




No comments:

Post a Comment