Thursday, August 29, 2019

அர்ப்பணிப்புடன் சேவையாற்ற ஒருவருக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு


அர்ப்பணிப்புடன் சேவையாற்ற ஒருவருக்கு
தமது கட்சி ஆதரவளிக்கும்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு



அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்ட பின்னரே தனது கட்சி எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் என்பதை முடிவு செய்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை இரண்டு கட்சிகள் அறிவித்துள்ளதாகவும் எனினும் ஐக்கிய தேசிய முன்னணி இதுவரையில் வேட்பாளரை பெயரிடவில்லை எவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், வேட்பு மனு தாக்கல் இன்னும் ஆரம்பிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

எனவே வேட்பு மனு தாக்கலின் பின்னர் தனது கட்சி யாரை ஆதரிப்பது தொடர்பில் கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்ற ஒருவருக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment