Saturday, August 3, 2019

இலங்கையின் முதல் ‘செல்பி’ இலங்கைத் தீவும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளும்

இலங்கையின் முதல்செல்பி
இலங்கைத் தீவும் 
அதனைச் சுற்றிய கடற்பகுதிகளும்

இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையினால் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா செய்மதி, ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இந்த செய்மதி தற்போது படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவையும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளையும் முதலில் படம் பிடித்துள்ளது ராவணா.

இலங்கை தனது செய்மதி மூலம் இலங்கைத் தீவை  படம்பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.






No comments:

Post a Comment