Sunday, September 1, 2019

மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் சார்பான வேண்டுகோள் சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவ சான்றிதழும்


மக்கள் பிரதிநிதிகளிடம்
பொதுமக்கள் சார்பான வேண்டுகோள்
சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவ சான்றிதழும்

இன்று அதிகாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருதில் இருந்து அம்பாரைக்கு 4.45க்குச் சென்றடைந்து Medical எடுப்பதற்கு சென்றபோது இவ்வாறு அதிகாலை சென்றவருக்கு முன்பே சுமார் 80 பேர் வரிசையில் நின்றுள்ளனர்.

நேரம் காலை 6.15 ஆகும்  போது சுமார் 150 பேர் வரை வரிசையில்  இதன் பிறகு வருபவர்களின் நிலை...... ஒரு நாளைக்கு 130 பேர் மாத்திரம் பரீட்சிக்கப்படுகின்றனர் ஒவ்வொரு நாளும் சுமார் 150-200 பேர் சந்தர்ப்பம் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

 தமது தொழில்களையும் வேறுவேலைகளையும் விட்டு வரிசையில் நின்று சந்தர்ப்பமும் கிடைக்காது அம்பாரைக்கோ அல்லது மட்டக்களப்பு Medical Center க்கோ சென்று திரும்ப வேண்டியுள்ளது .

இத்தனைக்கும் 8.30 மணிக்குத்தான் நிலையம் திறக்கப்படுகிறது அவ்வாறு காத்திருந்தும் ஏதாவது குறைபாடு இருந்தால் மீண்டும் அலைய வேண்டிய அவல நிலை.

துதவிர மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ நிலையம் மாத்திரமே உள்ளது என்பதனாலேயே இந்த அவல நிலை கரையோர மக்களுக்கு தொடர்கின்றது.

 து விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தலையீடு செய்து குறைந்தது மாவட்டத்துக்கு இரண்டு நிலையத்தையாவது அமைப்பதற்கு உரிய அமைச்சருடன் பேசி பெற்றுத்தர முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்கோள் விடுக்கின்றனர்.




No comments:

Post a Comment