Friday, November 1, 2019

4.7 கிலோகிராம் தங்க நகைகளுடன் 14 இலங்கையர்கள் கைது சுமார் 3 கோடி என மதிப்பீடு


4.7 கிலோகிராம் தங்க நகைகளுடன்
14 இலங்கையர்கள் கைது
சுமார் 3 கோடி என மதிப்பீடு

சட்டவிரோதமான முறையில் தங்கநகைகளைக் கொண்டுவந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 14 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (01)  காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 32 மில்லியன் ரூபா (ரூ.31,975,180) பெறுமதியான 4.7 கிலோகிராம் தங்க நகைகளை இந்தியாவின்  சென்னையிலிருந்து கொண்டுவந்த 30 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.





No comments:

Post a Comment