Saturday, November 2, 2019

வெளிநாட்டில் இலங்கையர் மூவரின் உயிரை பலியெடுத்த கோர விபத்து


வெளிநாட்டில் இலங்கையர் மூவரின்
உயிரை பலியெடுத்த கோர விபத்து

மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில்  மாணிக்கக் கல் வியாபாரிகளான இலங்கையர்கள் மூவர் இன்று(2) அதிகாலை பலியாகியுள்ளனர்.

மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற பிரதேசத்திற்கு இவர்கள் சென்ற வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதுவரையில் இரண்டு பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கண்ணனந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார் மற்றும் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவ்பர் மற்றும் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த ரிஸான் மவ்லானா ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஜனாஸாக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தூதரம் ஊடாக மேற்கொண்டுள்ளனர்.





No comments:

Post a Comment