Saturday, November 2, 2019

நிந்தவூரில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் மகளிர் மாநாடு


நிந்தவூரில் இடம்பெற்ற
புதிய ஜனநாயக முன்னணியின்
மகளிர் மாநாடு

சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்ததும் மகளிர் மாநாடு, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தலைமையில் இன்று (02) நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த சதுக்கத்தில் நடைபெற்றது.

சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் ஷனாஸ் ஹக்கீம் ஆகியோர் இதில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பிலும் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - தன்னாமுனை, மியானி மண்டபத்தில் இன்று பகல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் இம்மாநாடு இடம்பெற்றுள்ளது.

இதில் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜெலானி பிரேமதாச, மேயர் ரோசி சேனநாயக்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கமீன் மனைவி ஷானாஸ் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







No comments:

Post a Comment