Monday, March 23, 2020

'ஒற்றுமையின் சின்னம்': பிறந்த குழந்தைக்கு 'கொரோனா' பெயர்


'ஒற்றுமையின் சின்னம்':
 பிறந்த குழந்தைக்கு 'கொரோனா' பெயர்



இந்தியாவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதற்காக இப்பெயர் சூட்டப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது, 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் .பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன், அவரது மாமா திரிபாதி என்பவர் இப்பெயரை சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வரும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. ஆனால் மக்களிடையே அது சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்த்து உலக மக்களை ஒன்றாக இணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவராக இக்குழந்தை இருப்பார்' என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment