Wednesday, May 27, 2020

ரஷ்யாவில் கொரோனாவுக்கு 101 டாக்டர்கள் பலி


ரஷ்யாவில் கொரோனாவுக்கு
 101 டாக்டர்கள் பலி

கொரோனாவுக்கு ரஷ்யாவில் 101 டாக்டர்கள் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து, 3 லட்சத்து, 70 ஆயிரம் பேருடன், ரஷ்யா, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அங்கு, கொரோனாவுக்கு, 3,968 பேர் பலியாகி உள்ளனர். 1.42 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில், கொரோனாவுக்கு, 101 டாக்டர்கள் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 300 டாக்டர்கள் இறந்துள்ளதாக, இறந்த டாக்டர்களின் நண்பர்கள் வலைதளத்தில் தெரிவித்து, பெயர்களை வெளியிட்டுள்ளனர். இதனால், ரஷ்ய அரசு, கொரோனா பலியை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, ரஷ்யா மறுத்துள்ளது.




No comments:

Post a Comment