சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் ரயில் தடம் புரண்டது
3 பெட்டிகள் கவிழ்ந்தன
சுவிட்சர்லாந்தில்
ஆப்ல்ஸ் மலையில்
சென்று கொண்டிருந்த
மலை ரயில்,
நிலச்சரிவு காரணமாக திடீரென தடம்புரண்டது. இதில்,
3 பெட்டிகள்
பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 11 பயணிகள்
படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் ஹெலிகாப்டர்
மூலம் மீட்கப்பட்டனர். சுவிட்சர்லாந்தில்
ஆல்ப்ஸ் மலையில்
மரங்கள் அடர்ந்த
பள்ளத்தாக்கு பகுதியில் ரயில் இயக்கப்படுகிறது. டீபன்கேஸ்டல் மற்றும் ஜூரிச் இடையிலான இந்த
மலை ரயில்
பயணம் மிகவும்
திரில்லாக இருக்கும்.
ஆல்ப்ஸ் மலை
பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக
கனமழை
பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே கடும்
நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜூரிச்
நகருக்கு நேற்று
காலை 140
பயணிகளுடன் மலை ரயில்
கிளம்பியது. செயின்ட் மோரிட்ஸ் ரயில் நிலையத்துக்கு
அருகே சுரங்க
பாலத்தை கடந்து
சென்ற போது,
நிலச்சரிவு காரணமாக
ரயில் தடம்புரண்டது.
ரயிலின்
3 பெட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்தன. ஒரு பெட்டி,
கிடுகிடு பள்ளத்தில்
உருண்டு பாதாளத்தில் விழ
இருந்தது. எனினும்,
பள்ளத்தாக்கில் உள்ள பெரிய பெரிய மரங்களால் பள்ளத்தாக்கில்
விழாமல் தப்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிரவுபென்டன் பொலிஸார்
ஹெலிகாப்டர் மூலம் ரயில் பயணிகளை
மீட்டனர். இந்த
விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில்
5 பேர் உயிருக்கு
ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்
என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment