மாயமான மலேசிய விமான பயணிகளின்
வங்கி கணக்குகளிலிருந்து
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பு
மலேசிய
ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு
சொந்தமான எம்.எச் 370 என்ற
விமானம் கடந்த
மார்ச் மாதம் 8 ஆம் திகதி மாயமானது. கோலாலம்பூரில்
இருந்து பீஜிங்கிற்கு
செல்லும்
வழியில் இந்த விமானம் மாயமானது.
இந்த
விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் இறந்து
விட்டார்கள் என் அறிவித்து மலேசிய அரசு
அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அவர்களது குடும்பத்திற்கு
வழங்கி விட்டது.
இந்த
விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஆஸ்திரேலியாவை
சேர்ந்த ஒரு
நிறுவனம் ஈடுபட்டு
உள்ளது.விமானம்
மாயமாகி 5 மாதங்கள்
ஆகியும் இதுவரை
எந்த வித
தகவலும் கிடைக்கவில்லை
இந்த
நிலையில் விமானத்தில்
பயணம் செய்த
4 பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம்
மூலம்
34,890 அமெரிக்க டாலர்கள் எடுக்கபட்டு
உள்ளதை அதிகாரிகள்
கண்டு பிடித்து
உள்ளதாக மலேசிய
பொருளாதார குற்ற
பிரிவு பொலிஸ்
அதிகாரி
அஷானி அப்துல் கூறி உள்ளார். அவர்
மேலும் கூறும்
போது. இந்த
விவரம்
வங்கியின் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் போது
தெரிய வந்ததாக
உள்ளூர் வங்கி
முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாங்கள் சிசிடிவி
யில் பதிவான
விவரங்களை கொண்டு இதில் சந்தேகபடும் படியான
நபர்களின் தொடர்பு
உள்ளதா என
விசாரணை நடத்தி
வருகிறோம்.இவ்வாறு
அவர் கூறியுள்ளார்.
இந்த
பண பரிவர்த்தனை
கடந்த ஜூலை
மாதம் 18 ஆம்
திகதி நடந்து உள்ளது. 3 பயணிகளின் கணக்கில்
இருந்த பணம்
4 வது பயணிக்கு
மாற்றபட்டு உள்ளது.
4-வது
பயணியின்
கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் கிளாங்க் பள்ளதாக்கு
பகுதியில் இருந்து
பணம் எடுக்கபட்டு
உள்ளது.இது
குறித்து வங்கி
சார்பில் கடந்த்
ஆகஸ்ட் 2 ஆம்
திகதி புகார் செய்யப்பட்டுள்ளது.என தகவல்கள்
தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment