4 ஆண்டுகளாக பாடசாலைக்கு
செல்ல முடியவில்லை
அபூர்வ நோயால் அவதிப்படும் மாணவர்
நடக்க,
நிற்க, அமர
முடியாமல் அபூர்வ
நோயால்
அவதிப்படும் மாணவர் 4 வருடங்களாக
பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றார்.
இந்தியாவிலுள்ள குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மலைக் கிராமமான தச்சமலையைச்
சேர்ந்த ரமேஷ்
- வசந்தி
தம்பதியினர் பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில்
வசிக்கின்றனர். பழங்குடியினத்தவர்களான
இவர்களது மகன்
சஞ்சய்காந்த் (வயது14) ஆறாம் வகுப்புவரை
நன்றாக நடமாடிக்
கொண்டிருந்தான். திடீரென
ஒருநாள் காலில்
ஏற்பட்ட வலி
அவனது வாழ்க்கையை மொத்தமாக
முடக்கி போட்டுவிட்டது.
தற்போது நடக்கவும், அமரவும்,
நிற்கவும் முடியாமல்
தலையை நிமிர்த்தி
பார்க்கவும் முடியாமல்
அவதிப்படுகிறான். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை
அவனுக்கு காலில்
திடீரென வலி
ஏற்பட்டது. விளையாடியபோது
கீழே விழுந்து
அடிபட்டிருக்கும் என அவனது பெற்றோர்
சாதாரணமாக கருதிய
நிலையில், மறு
காலிலும்
வலி ஏற்பட்டுள்ளது. 2 கால்களிலும்
தாங்கமுடியாத வலி ஏற்பட்ட நிலையில்
அரசு மருத்துவமனை
மற்றும் தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால்
சிகிச்சை மேற்கொண்டும் வலி குறையவில்லை. 2 மூட்டுப் பகுதிகளிலும்
வீக்கம் ஏற்பட்டு,
கை, கால்,
உடல் பகுதிகள் மெலிந்து
எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு உடல் மாறியது.
அத்துடன் கழுத்துப்
பகுதியும் ஒரு
பக்கமாக
திரும்பியது.
இதனைத்
தொடர்ந்து சஞ்சய்காந்தால்
நிற்கவோ, அமரவோ, நடக்கவோ
முடியாத நிலை
ஏற்பட்டது. கூலிவேலை செய்து குடும்பத்தை
பராமரித்து வந்த இவரது தந்தை ரமேஷ்,
தன்னால்
இயன்ற வரை மகனுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்துள்ளார். எனினும்
கடந்த 4 ஆண்டுகளாக
சஞ்சய்காந்தின் உடல் நிலையில் எந்த
முன்னேற்றமும் இல்லை. சஞ்சய்காந்தை பரிசோதித்த
டாக்டர்கள் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்தான்
தாக்கியுள்ளது. தொடர்ந்து சிகிச்சையளித்தால் குணமாக்க
முடியும் என
கூறியுள்ளனர். ஆனால், தொடர் சிகிச்சை
அளிக்க ரமேசுக்கு
வசதி இல்லை. 4 வருடங்களாக பாடசாலைக்கு
செல்லமுடியாமல் நோயுடன் போராடுகிறான் சஞ்சய்.
தன்னுடன் படித்த மாணவர்கள் தற்போது 10ம்
வகுப்பு
படிப்பதாகவும், தனக்கும் பாடசாலையில்
சென்று படிக்க
ஆசையாக
உள்ளதாகவும், ஆனால் நோயினால்
நடமாடவே முடியவில்லை என வேதனையுடன் கூறுகின்றான்
சஞ்சய்காந்த்.
இதுகுறித்து
சஞ்சய்காந்தின் தந்தை ரமேஷ் கூறியதாவது: கூலி வேலை செய்து வாழ்ந்து
வருகிறேன். 4 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும்
எனது மகனும்
பாடசாலைக்கு சென்று படிக்க வேண்டும்
என்று ஆசையாக
உள்ளது. ஆனால்
ஏழையான
என்னால் அவனுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியவில்லை.
நோயின் தாக்கத்தால்
அவனால் ஒழுங்காக பேசவோ,
சிறிதுநேரம்கூட நிற்கவோ முடியவில்லை. எனவே நல் உள்ளம்
படைத்தவர்கள் என் மகனின் சிகிச்சைக்கு உதவ
வேண்டும். இவ்வாறு
அவர் கூறுகின்றார்.
0 comments:
Post a Comment