சம்மாந்துறையில் புதியதோர் அரசியலை நோக்கிய
பயணம் ஆரம்பமாகுமா..??

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

சம்மாந்துறை வரலாறு பேசுமளவு மிகப் பெரிய அரசியல் ஜாம்பவான்களை உருவாக்கிய ஊர் என்பதை யாவரும் அறிவர்.அண்மையில் சம்மாந்துறையில் ஏதோ ஒரு புதியதோர் அரசியற் கட்சி உதயமாகப் போவதாகவும்,அதனால் அம்பாரை மாவட்ட முக்கிய அரசியற் பிரமுகர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஊடகங்கள் பல செய்தியை வெளியிட்டு வருகின்றன.
அக் கட்சி எது..?உருவாக்குபவர் யார்..?அவரது நோக்கம் என்ன..?ஏன் அவரால் ஏனைய கட்சிகளால் இணைந்து செயற்பட இயலாது..?
போன்ற பல்லாயிரம் வினாக்கள் சம்மாந்துறை மக்கள் உட்பட அம்பாரை மாவட்ட மக்கள் மனங்களில் உதித்து சிலர் தெளிவான பதில்களோடும்,மற்றும் சிலர் அரை குறை பதில்களோடும்,சிலர் கிஞ்சித்தும் இது பற்றிய விடைகளின்றியும் நடை பயின்று கொண்டிருக்கிறனர்.
ஊடகங்களில் உலா வரும் புதிய கட்சியை யாரோ?ஒருவர் உருவாக்கப் போகிறார் என்பவர் வேறு யாரும் அல்ல. சம்மாந்துறை உட்பட பல ஊர்களில் தனது சமூக சேவையினால் மக்கள் மனதில் குறித்த இடத்தை பிடித்திருத்தும் பிரபல தொழிலதிபரும்,பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபிர் அவர்களே!
அவரிடம் கேட்கப்பட்ட  சில கேள்விகளுக்கு அவரது சாதூரியமான பதில்கள்

வினா-1
நீங்கள் புதிய கட்சியை உருவாக்கப்போவதாக கதைகள் அடிபடுகிறதே அது உண்மையா?அதைப் பற்றி விளக்க முடியுமா?
தற்கால சூழ் நிலைகளில் முஸ்லிம் அரசியற் கட்சிகளின் போக்கு புதியதோர் அரசியற் கட்சியின் தேவையை உணர்த்தி நின்றாலும்,புதிய கட்சிகளின் அதிகரிப்பு சமூகத்தின் எதிர்கால செயற்பாடுகளிற்கு நல்லதல்ல.இதைக் கருத்திற் கொண்ட எனது தலைமையிலான எனது குழுவினர் பிரதான அரசியற் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.அதற்கு அவர்கள் சாதகமான பதில்களை தருவார்களாக இருந்தால் எமக்கு புதியதோர் கட்சி உருவாக்க வேண்டிய கடமை இருக்காது.எமது கோரிக்கைகளை கருத்திற் கொள்ளாது மக்கள் சார்பான எனது கோரிக்கைகளை நிராகரிப்பார்களாக இருந்தால் இன்சா அல்லாஹ் வெகு விரைவில் எமது புதிய கட்சியை எதிர்த்து அரசியல் நடை பயில இலங்கை அரசியற் கட்சிகள் துணிவு பெறட்டும்.
வினா-2
நீங்கள் உங்களது கோரிக்கைகளை மக்களுக்கு விளக்க முடியுமா?விளக்கி உள்ளீர்களா?
நாம் மக்களை நேரடியாக சந்தித்தும்,இணையதளங்கள்,முக நூல் வழியாகவும் எமது கொள்கைகளை தற்போது மக்களுக்கு விளக்கி வருகிறோம்.வெகு விரைவில் மீடியா கென்பரன்ஸ்,எமக்கென்று தனித்துவமான பத்திரிகை,இணைதளங்கள் வாயிலாகவும் எமது கொள்கைகளை விளக்க உறுதி பூண்டுள்ளோம்.எமது கொள்கைகள் இவைகள் தான்
*மு.கா தேர்தலில் தனித்துப் போட்டி இட்டு ஆசனங்கள்,சலுகைகள்,உரிமைகளுக்கான பேரம் பேசல் சக்திகளை இழந்திடாது தேசிய கட்சி ஒன்றுடன் இணைந்து ஓர் உடன் பாட்டு அடிப்படையில் 3 தேர்தல் தொகுதிகளிலும் மூவரை களமிறக்கி முஸ்லிம் சமூகத்திற்கான நலவை உறுதிப்படுத்த வேண்டும்.
*3 தொகுதிகளிலும் களமிறக்கப்படும் வேட்பாளர்களில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெறுபவருக்கு மு.கா பேசக் கூடிய சக்திகளுடன் பேசி கெபினட் அமைச்சுப் பதவியையும்,அம்பாரை மாவட்ட தலைமைத்துவப் பதவியையும் பெற்றுக் கொடுத்து அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியலை ஸ்திரப்படுத்த வேண்டும்.
*அவ்வாறு தெரிவு செய்யப்படும் அந்நபரை மு.கா நடாத்துகின்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் உள்வாங்கல் வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகளுக்கு மு.கா உடன்படுமாக இருந்தால்,எமக்கு கட்சி உருவாக்க வேண்டிய அவசியம் இருக்காது.நாம் மு.கா உடன் உடன்பாட்டு அனுகுமுறையில் செல்லத் தயார்.
வினா-3
உங்களது கோரிக்கைகள் மு.கா மாத்திரம் நோக்கியதாக இருக்கிறதே,தே.கா பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
மாகாண,பிரதேச,பாராளுமன்ற தேர்தல்களை வைத்துப் பார்க்கும் போது அம்பாறை மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸையே அதிகம் ஆதரிக்கின்றனர்.எனவே,எமது அரசியல் நீரோட்டப் பாதைக்கு மு.கா முதன்மைப் படுத்துவதே பொருத்தமானது.அது மாத்திரமன்றி தே.கா முற்று முழுதாக அரச சார்புப் போக்கை கடைப்பிடிப்பதால் அவர்கள் தாங்கள் தனித்துவமான கட்சிக்குரிய அந்தஸ்தை இழந்து நிற்கின்றனர்.அவர்களும் தனித்துவமான முறையில் நடை பயில முயன்றால் நாம் மேலே மு.கா இற்கு விடுத்த கோரிக்கைகள் தே.கா இற்கும் பொருந்தும்.அவ்வாறு அவர்களும் எமது கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் அவர்களுடனும் நாம் இணைந்து செயற்படத் தயாராகவே உள்ளோம்.
வினா-4
உங்கள் கட்சி அம்பாறை மாவட்ட மக்களிடையே எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாக்கம் செலுத்துமா?


நிச்சயமாக தாக்கம் செலுத்தும் கட்சியாக எமது கட்சி மிளிர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள முக்கிய அரசியற் பிரமுகர்கள்,விளையாட்டு கழகங்கள்,சமூக சேவைகளில் ஆர்வமுள்ள சங்கங்கள்,புத்திஜீவிகள் எம்மை நாளுக்கு நாள் சந்திக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதும்.எம்மை நேரடியாக எதிர்க்க வலுவிழந்து எனது காரியாலத்திற்கு நாள் தோறும் வருவோரை கணக்கிட்டு சொல்ல முக்கிய அரசியற் பிரமுகர்கள் ஆட்கள் நியமித்திருப்பதும் எமது கட்சி எதிர்வரும் தேர்தலில் தாக்கம் செலுத்தும் கட்சியாக மாறும் என்பதை சான்று பகருகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top