காஸாவில் சண்டை நிறுத்தத்தை மேலும் 5 நாட்கள் நீடிக்க

பாலஸ்தீனம்- இஸ்ரேல் சம்மதம்

காஸாவில் சண்டை நிறுத்தத்தை மேலும் 5 நாட்கள் நீடிக்க இஸ்ரேல் இராணுவம் மற்றும் பாலஸ்தீனம் சம்மதம் தெரிவித்துள்ளதுகாஸாமுனையில் இஸ்ரேல் இராணுவம் - ஹமாஸ் இயக்கம் இடையே கடந்த மாதம் 8 ஆம் திகதி தொடங்கிய சண்டையில் இரு தரப்பினரும் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த சண்டையில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியானது தொடர்கதையாகியது சர்வதேச சமுகத்தை உலுக்கியது. போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு .நா. அடைக்கலம் கொடுத்து வந்த இடத்திலும் இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,900 தாண்டியது.

இதற்கிடையே, இஸ்ரேல்ஹமாஸ் போராளிகள் இடையே போர்நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக எகிப்து குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த 11 ஆம் திகதி  பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாலஸ்தீன பிரதிநிதி ஒருவர் கூறுகையில், மேலும் 72 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யுமாறு எகிப்து குழுவினர் தெரிவித்த யோசனையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார். பின்னர் இஸ்ரேலும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காஸாவில் சண்டை நிறுத்தப்பட்டது முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கினர். இதற்கிடையே அங்கு நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து ஏகிப்தில் நடைபெற்று வந்தது. தற்போது காஸாவில் சண்டை நிறுத்தத்தை மேலும் 5 நாட்கள் நீடிக்க இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. காஸா முனையில் சண்டை நிறுத்தத்தை மேலும் 5 நாட்கள் நீடிக்க இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஒப்புக் கொண்டுள்ளது என்று பாலஸ்தீன அதிகாரி கெய்ரோவில் அறிவித்துள்ளார். முந்தைய சண்டை நிறுத்த ஒப்பந்தம் முடியும் நிலையில் 5 நாட்கள் சண்டை நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top