தந்தையைக்
காப்பாற்ற 5 இளைஞர்களுடன்
சண்டையிட்ட
இளம்பெண்
இந்தியாவிலுள்ள
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில்
தனது தந்தையைத்
தாக்கிய 5 பேர்
கொண்ட கும்பலை
அடித்துத் துவைத்த
இளம்பெண் குறித்து
சமூக வலைத்தளங்களில்
இப்போது செய்திகள்
வேகமாகப் பரவி
வருகின்றன.
நடுத்தர
வயது நபர்
ஒருவர் இருசக்கர
வாகனத்தில் தன் மகளுடன் சென்று கொண்டிருந்தார்.
ஒரு இடத்தில்
கார் ஒன்று
அந்த பைக்
மீது இலேசாக
மோதியது. இதை
அடுத்து காரில்
இருந்து கீழே
இறங்கிய 5 பேர்
கொண்ட கும்பல்,
அந்த மனிதரை
கண்மூடித் தனமாகத்
தாக்கத் தொடங்கியது.
உதவிக்கு யாரும்
வராத நிலையில்,
அந்த நபரின்
இளவயது மகள்
களத்தில் இறங்கினார்.
5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார்.
இதன் பின்னரே
சிலர் கூடி,
அந்த கும்பலிடம்
இருந்து அந்த
நபரை மீட்க
முன்வந்தது.
இந்தச்
சம்பவத்தை சாலையில்
சென்று கொண்டிருந்த
ஊடகவியலாளர் ஒருவர் படம் எடுத்து இணையத்தில்
ஏற்றினார். முகநூலில் இப்போது அந்தப் பெண்ணின்
வீரம் குறித்து
பரவலாகப் பேசப்பட்டு
வருகிறது. பெண்ணுக்கு
உடல் ரீதியான
பலவீனம் இல்லை
என்பதை எடுத்துக்
காட்டியதற்காக பலரும் அவரது துணிச்சலைப் பாராட்டி,
அவருக்கு பாராட்டுகளைக்
குவித்து வருகின்றனர்.
இந்தியாவில்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும்
நிலையில் அவர்களது
பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. உத்தரபிரதேச
மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள்
அதிகரித்து காணப்பட்டது. தற்போது பெண்கள் தங்களை
காத்துக்கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இது
பெண்கள் பாதுகாப்பு
குறித்து நாட்டில்
கவலைகளை வெளிபடுத்திய
ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை
அளித்துள்ளது.
0 comments:
Post a Comment