இஸ்ரேல் விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம்

ஹமாஸ் இயக்கம் எச்சரிக்கை

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருக்கும் விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்கள் தவிர்க்க வேண்டும் என ஹமாஸ் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாக்குதல்களை தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதால் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக இதற்கு  விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இந்த எச்சரிக்கை அமுலுக்கு வருவதாக, ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே சமாதானம் ஏற்படுத்த எகிப்து அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டரின் மனைவியும், 7 மாத குழந்தையும் பலியாகினர். இதனையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது.
பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்படும் நல்வாய்ப்பை எதிரிகள் தொலத்துவிட்டனர். இனி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை. கெய்ரோவில் இருந்து பாலஸ்தீன தலைவர்கள் நாடு திரும்புவதே நல்லது என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி  முதல் நடைபெற்று வரும் போரில், பாலஸ்தீன தரப்பில் 2,047 பேரும் இஸ்ரேல் தரப்பில் 68 பேரும் பலியாகினர்.


The grandfather of three children killed by an Israeli air strike weeps outside a morgue in Gaza City


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top