உலகில் அதிக வயதான ஆண்
கின்னஸில் இடம்பிடித்த ஜப்பான் தாத்தா

உலகிலேயே அதிக வயதான ஆணாக ஜப்பானை சேர்ந்த சக்காரி மோமோய் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இன்று இடம் பிடித்தார்.
புக்குஷிமா அருகிலுள்ள மினியாமிசோனாவில் 1903ஆம் ஆண்டு பிறந்து, ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கு பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் வாழ்ந்து வரும் சக்காரி மோமோய்-க்கு தற்போது 111 வயது ஆகின்றது.
உலகிலேயே அதிக வயதான ஆணாக கின்னஸில் இடம் பிடித்திருந்த அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸாண்டர் இமிச் என்பவர் கடந்த ஜுன் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, இந்த அங்கீகாரம் சக்காரி மோமோய்யை வந்தடைந்துள்ளது.ஏற்கனவே, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் அங்கீகாரத்தை ஜப்பானின் ஒஸாக்கா நகரில் வாழ்ந்து வரும் மிசாவோ ஒக்காவா(வயது116) என்ற மூதாட்டி பெற்றுள்ள நிலையில், உலகிலேயே அதிக வயதான ஆணும், பெண்ணும் வாழும் நாடு என்ற பெருமைக்குரிய அடையாளத்தை சக்காரி மோமோய்-யின் மூலம் தற்போது ஜப்பான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் செவித்திறன் குறைபாடு தவிர வேறு எந்தவித உடல் சார்ந்த பாதிப்பும் அவருக்கு இல்லை என்றும், புத்தகம் படிப்பதிலும், டி.வி.யில் சுமோ மல்யுத்தப் போட்டிகளை பார்த்து ரசிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.கின்னஸில் தனது பெயர் இடம் பெற்றது குறித்து பெருமை பொங்க இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சக்காரி மோமோய் இன்னும் 2 ஆண்டுகள்வரை வாழ விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top