மாயமான மலேசிய விமானம்;
பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம்
புதிய தகவல்

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல் தற்போது  வெளியாகியுள்ளது.
239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை. தொடர்ந்து மர்மமே நீடித்து வருகிறது.
இந்நிலையில் மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் மலேசிய விமானத்தின் பைலட் வேண்டுமென்றே ஆக்சிஜன் தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த விமான விபத்துக்கள் குறித்த ஆய்வு நிபுணர் இந்த சதேகத்தை எழுப்பியுள்ளர். இது தொடர்பான கட்டுரை டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தின் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனரும், பைலட்டுமான இவான் வில்சன் என்பவரே இந்த புதிய நோக்கை முன் வைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகமும், பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து இருக்கலாம் என்ற கருத்தையே தெரிவித்தது. ஏற்கனவே மலேசிய விமானத்தில் இருந்த விமானி அகமது ஷா மீது பெரும் சந்தேகங்களை அதிகாரிகள் எழுப்பியிருந்தனர்.

தற்போது இவான் வில்சனும் இந்த கருத்தையே தெரிவித்துள்ளார். விமான கேபினில் பைலட் ஆக்சிஜன் தொடர்பை துண்டித்திருக்கலாம். அப்போது பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் ஆக்சிஜன் மாஸ்க்குளை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை. அகமது ஷா தனது துணை பைலட்டை கேபினில் இருந்து வெளியேற்றிவிட்டு, தனது ஆக்சிஜன் மாஸ்க்கைப் பயன்படுத்தி விமானத்தை ராடார் பார்வையிலிருந்து மறைத்து இருக்கலாம். பின்னர் அவர் கட்டுப்பாட்டுடன் விமானத்தை கடலுக்கு இறக்கி இருக்கலாம். அதனால் தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்று வில்சன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top